குடிநீர் கேன்களில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து குடிநீர் கேன்களில் வாக்களிப்பது குறித்த ஒட்டுவில்லைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.;
Update: 2024-03-23 06:04 GMT
வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு
பாராளுமன்ற பொதுத்தேர்தல் - 2024-னை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குடிநீர் கேன்களில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் ஒட்டுவில்லைகளை ஒட்டினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ம. இராஜசேகரன், கடலூர் வருவாய் கோட்டாட்சியர் இ. அபிநயா, மகளிர் திட்ட இயக்குநர் ஸ்ருதி, மாவட்ட சமூக நல அலுவலர் கோமதி (பொ) ஆகியோர் உள்ளனர்.