குப்பை தரம் பிரித்தல் குறித்து விழிப்புணர்வு
தென்காசியில் குப்பைகள் தரம்பிரிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நடைபெற்றது.;
Update: 2024-01-27 12:05 GMT
தென்காசி மாவட்டம், தென்காசி உள்ள முத்தாரம்மன் கோவிலில் வைத்து நகராட்சி ஆணையாளர் முன்னிலையில் பொதுமக்களுக்கு குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என விழிப்புணர்வு வழங்கப்பட்டு தூய்மைக்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது. குப்பைகள் எவ்வாறு தரம் பிரிக்கப்பட வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் நிகழ்வில் சுகாதார ஆய்வாளர் தூய்மை இந்திய திட்ட பணியாளர்கள் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.