அருப்புக்கோட்டை பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பள்ளியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டது.

Update: 2024-01-30 08:49 GMT
விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை இக்ரா மெட்ரிகுலேஷன் பள்ளியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி;விபத்துகள் எதனால் ஏற்படுகிறது அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

தேசிய சாலை பாதுகாப்பு மாதவிழா ஜனவரி 15ஆம் தேதி முதல் பிப்ரவரி 14-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு அருப்புக்கோட்டை இக்ரா மெட்ரிகுலேஷன் பள்ளியில் அருப்புக்கோட்டை நகர் போக்குவரத்து காவல்துறை சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செந்தில்வேல் தலைமை ஏற்று பள்ளி மாணவ மாணவியர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். விபத்துகள் எதனால் ஏற்படுகிறது தடுக்கும் வழிமுறைகள் குறித்தும், வாகனங்களை பராமரிப்பு செய்வதன் மூலம் விபத்துக்களை எப்படி குறைக்கலாம் என்பது குறித்தும் விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் தலைக்கவசம் அணிந்து சென்றால் இதுபோன்று விபத்து ஏற்பட்டாலும், தலையில் காயம் ஏற்பட்டு உயிர் இழப்புகள் ஏற்படாமல் தவிர்க்கலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதனை தொடர்ந்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்க்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகி செய்யது இப்ராஹிம், மற்றும் காதர்பாட்ஷா ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News