சேலம் மத்திய சிறையில் விழிப்புணர்வு முகாம்
சேலம் மத்திய சிறையில் விழிப்புணர்வு முகாம்
By : King 24x7 Website
Update: 2024-01-09 09:09 GMT
சேலம் மத்திய சிறை மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை ஆகியவை இணைந்து தேவையில்லா மது பழக்கம், தேவையான நல்ல பழக்கம் என்ற தலைப்பில் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு முகாமை நடத்தின. சேலம் மத்திய சிறையில் நடைபெற்ற இந்த முகாமுக்கு வந்தவர்களை சிறை சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத் வரவேற்று பேசினார். மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் வளர்மதி கலந்து கொண்டு, மது பழக்கத்தால் குடும்பத்தினர் எவ்வாறு நிலை தடுமாறுகின்றனர். அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பு குறித்து விளக்கம் அளித்து பேசினார். இந்த முகாமில் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரி மனநல மருத்துவர் விவேகானந்தன், மன இயல் நிபுணர் வைஷ்ணவி, துணை சிறை அலுவலர் கோவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முகாமில் 160 சிறைக்கைதிகள் கலந்து கொண்டனர். முடிவில் சிறை அலுவலர் அன்பழகன் நன்றி கூறினார்.