பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு !

விழுப்புரத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2024-03-06 06:22 GMT

விழிப்புணர்வு

விழுப்புரம் மாவட்ட காவல்துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற திட்டத் தின் கீழ் விழிப்புணர்வு பேரணி நேற்று காலை நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இப்பேரணியை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன், கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழுப்புரம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் முன்னிலை வகித்தார். இப்பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று அரசு சட்டக்கல்லூரி அருகில் முடிவடைந்தது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் விழுப்புரம் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கல்லூரி, அரசு சட்டக்கல்லூரி, அன்னை தெரசா பாரா மெடிக்கல் கல்லூரி, ஆர்.ஜே. மாடர்ன் கம்யூனிட்டி கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள், பேராசிரி யர்கள் பலர் கலந்துகொண்டு பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற விளம்பர பதாகை களை கையில் ஏந்தியவாறு பேரணியாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர். அதனை தொடர்ந்து அரசு சட்டக்கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், போக்சோ சட்டங்கள், சைபர் பாது காப்பு மற்றும் விழிப்புணர்வு, அவசர உதவி எண்கள், பெண்களுக் கான உதவி எண் 181, சைபர் புகார் உதவி எண் 1930, காவல் உதவி செயலி ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Tags:    

Similar News