மின்வாரிய பணியாளர்களுக்கு தீ விபத்து குறித்து விழிப்புணர்வு !
திண்டுக்கல் தீயணைப்புத்துறை சார்பில் பொன்னகரம் துணை மின் நிலையத்தில் பணியாளர்களுக்கு தீத்தடுப்பு, தீயணைப்பான் உபயோகிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
By : King 24x7 Angel
Update: 2024-03-20 09:01 GMT
திண்டுக்கல் தீயணைப்புத்துறை சார்பில் பொன்னகரம் துணை மின் நிலையத்தில் பணியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை மதியம் 4 மணி அளவில் தீத்தடுப்பு, தீயணைப்பான் உபயோகிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார் உதவி பொறியாளர்கள் கேசவன் கிருஷ்ணசாமி உமாபதி திவ்யப் பிரியதர்ஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தீ தடுப்பு பாதுகாப்பு பயிற்சி குறித்து விளக்கிப் பேசினார். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மின் தீ விபத்து ஏற்படாமல், பரவாமல் தடுப்பது குறித்தும், தீயை அணைக்கும் வழிமுறைகள் பற்றி செய்முறை மூலம் எடுத்துரைத்தனர். இதில் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.