கடையநல்லூரில் விழிப்புணர் நிகழ்ச்சி நடைபெற்றது
கடையநல்லூர் பேருந்து நிலையத்தில் பயணத்தின் போது திருட்டு நடப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.;
By : King 24x7 Website
Update: 2023-10-25 11:27 GMT
கடையநல்லூர் பேருந்து நிலையம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பேருந்து நிலையத்தில் மாவட்ட எஸ்பி. உத்தரவின்படி காவல்துறை சார்பில் காவல் ஆய்வாளர் ராஜா பயணத்தின் போது திருட்டு நடப்பது குறித்து விழிப்புணர்வு செய்தார். அப்போது தங்களின் பர்ஸ், கழுத்தில் இருக்கும் நகைகளை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.