விழுப்புரத்தில் பழங்குடியின மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழுப்புரத்தில் அரசு நலத்திட்டங்கள் குறித்து பழங்குடியின மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-05-03 16:44 GMT

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் 

விழுப்புரம் நகர பகுதியான ஆசாகுளம் பகுதியில் பழங்குடியின, நரிக்குறவர் மக்களுக்கு மத்திய, மாநில அரசு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பழங்குடியினர் செயற்பாட்டாளர் விழிப்பு கண்காணிப்புக் குழு உறுப்பினர் வக்கீல் அகத்தியன் தலைமை தாங்கி தாட்கோ, மீனவர் நலன், பட்டு வளர்ச்சி,

வேளாண்மை திட்டம், சிறு, குறு தொழில் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் கல்வி, பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து விளக்கி கூறினார். ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் ஆறுமுகம் சிறப்புரையாற்றினார்.

இதில் சமூகநீதி விடுதலை முன்னணி அமைப்பை சேர்ந்த வேலு, புரட்சிக்கழகம் செல்வராஜ், சமூக ஆர்வலர் பிரசாந்த், நரிக்குறவர் பழங்குடியின மக்கள் தலைவர் லைட்டர்வீரப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற 200-க்கும் மேற்பட்ட பழங்குடியின நரிக்குறவர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News