பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரம்பலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2024-01-25 03:29 GMT

பெரம்பலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்றது. 

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் இணைந்து தேசிய பெண் குழந்தை தின உறுதிமொழி ஏற்றனர்.

   இந்த உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அதிகாரி ஜெகநாதன் முதன்மைக் கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் சுரேஷ் மற்றும் துணை தலைமையாசிரியர் மரகதம் சிறப்பு உதவி ஆய்வாளர் மருதமுத்து, மாவட்ட குழந்தைகள் நல அலகு பணியாளர் ராதாஜெயலெட்சுமி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் ஆகியோர்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர். இதன் பின்னர் அப்பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் போக்சோ சட்டம் குறித்து விரிவான விழிப்புணர்வும் குழந்தை திருமணம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதை முற்றிலும் தடுக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு சூழ்நிலைகளினால் பள்ளிகளில் படிப்பை பாதியில் நிறுத்திய பள்ளி இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாணவ மாணவிகள் ஒவ்வொருவருக்கும் தொடுதல் குறித்த விழிப்புணர்வு GOOD TOUCH BAD TOUCH ஏற்படுத்தப்பட்டது. மேலும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் இலவச உதவி எண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417, சைபர் கிரைம் உதவி எண்கள் 1930 சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் மற்றும் மது விற்பனை புகார் எண் 10581, உதவி எண் 18004259565 குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Tags:    

Similar News