நாமக்கல்லில் விழிப்புணர்வு பேரணி

நாமக்கல்லில் மாநில பெண் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2024-02-23 10:03 GMT

விழிப்புணர்வு பேரணி துவக்கி வைப்பு 

நாமக்கல்லில் மாநில பெண் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், மாநில பெண் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு ”பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இப்பேரணியானது, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொடங்கி, நாமக்கல் நகர காவல் நிலையம் வரை சென்று மீண்டும் கல்லூரி வரை சுமார் 2 கி.மீ தூரம் 200-க்கும் மேற்பட்ட அறிஞர் அண்ணா கலை கல்லூரி மாணவர்கள், இராமலிங்கம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், சமூக நலத்துறை அலுவலர்கள்,

அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட ஏராளமானோர் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர்.மா.கோவிந்தராசு, மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) க.மோகனா, பேராசிரியர் முனைவர் ஷர்மிளா குமார், கல்லூரி மாணவ, மாணவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News