பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு பேரணி
தத்தலூர் கிராமத்தில் பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு பேரணி.
Update: 2024-04-02 15:45 GMT
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம், தத்தலூர் கிராமத்தில் பாராளுமன்ற தேர்தல் 2024-ல் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து "நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிப்போம், நியாயமாக வாக்களிப்போம்" என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், துவக்கி வைத்தார். உடன் திருப்பெரும்புதூர் பாராளுமன்றத் தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் அபிஷேக் சந்திரா இருந்தனர்.