18 வயது நிரம்பிய அனைவரும் தவறாது வாக்களிக்க விழிப்புணர்வு பேரணி

18 வயது நிரம்பிய அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி.;

Update: 2024-04-07 12:39 GMT
நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் 500க்கும் மேற்பட்டோர் மெழுகுவர்த்தி ஏந்தி ”விரலில் மையுடன் உள்ள கை வடிவில்” நின்று நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கற்பகம், கலந்து கொண்டு விழுப்புணர்வு பேரணியையும் தொடங்கி வைத்தார். நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் அஸ்வின் குழுமத்தின் சார்பில் அந்நிறுவன ஊழியர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான கற்பகம், நகராட்சி அலுவலகத்தில்ஏப்ரல் ஆறாம் தேதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் தொடங்கி, பாலக்கரை அருகே உள்ள தனியார் மைதானத்தில் முடிவடைந்தது. பேரணியின் முடிவில் வாக்களிக்கும்போது விரலில் வைக்கப்படும் மையுடன் உள்ள கை வடிவில் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி நின்று வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கற்பகம் மெழுகுவர்த்தி ஏந்தி நின்று, இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.  மேலும் இதில் கலந்து கொண்ட அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வின் போது, அஸ்வின்ஸ் குழுமத் தலைவர் கணேசன், தேர்தல் விழிப்புணர்வு பணிக்கான ஒருங்கிணைப்பு அலுவலர் கோபால், பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News