சர்வதேச உலக சுகாதார தினத்தை முன்னிட்டு பள்ளி குழந்தைகளின் விழிப்புணர்வு பேரணி
சர்வதேச உலக சுகாதார தினத்தை முன்னிட்டு பள்ளி குழந்தைகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு தனியார் பள்ளி மாணவர் மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உலக சுகாதார தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மை ஹெல்த் மை ரைட்ஸ் எனும் தலைப்பில் நோய் நொடி இன்றி நமது உடலை பேணி பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சாத்தூரில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கோஷங்கள் எழுப்பியவாறு கையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கொண்டு இசைக்கருவிகள் மூலம் இசை இசை கொண்டு விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். பேரணியின் இடையில் நமது உடலை நோய் இன்றி பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் வழிமுறைகள் குறித்து மருத்துவர்கள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்புரை ஆற்றினர். இந்தப் பேரணியானது சாத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து மெயின் ரோடு வழியாக சாத்தூர் காவல் நிலையம் வந்தடைந்து பின்னர் கிருஷ்ணன் கோவில் வரை சென்று நிறைவடைந்தது. பேரணியில் பள்ளி மாணவ மாணவிகளுடன் பள்ளி ஆசிரியைகளும் கலந்து கொண்டனர்.