செஞ்சியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

செஞ்சியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியை டி.எஸ்.பி துவக்கி வைத்தார்;

Update: 2024-04-05 12:09 GMT

விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டவர்கள்

ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட செஞ்சி சட்டமன்ற தொகுதி சார்பில் நாடாளுமன்ற தேர்தலின்போது 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி செஞ்சியில் நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு செஞ்சி தாசில்தார் ஏழுமலை தலைமை தாங்கினார்.

மேல்மலையனூர் தாசில்தார் முகமது அலி முன்னிலை வகித்தார். ஆரணி நாடாளு மன்ற தொகுதிக்கான உதவி தேர்தல் அலுவலர் வளர்மதி, செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கவினா ஆகியார் கலந்து கொண்டு கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தனர். இதில் தனி தாசில்தார்கள் செல்வகுமார், துரைச்செல்வன், புஷ்பா வதி, தேர்தல் துணை தாசில்தார்கள் மணிகண்டன், சார்லின், வரு வாய் ஆய்வாளர்கள் செல்வம், பழனி, கோவிந்தன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டு இருசக்கர வாகனங்களில் சென்று 100 சதவீத வாக்குப்பதிவை வலி யுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த பேரணியானது செஞ்சி தாலுகா அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு காந்தி கடை வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று பேரூராட்சி அலுவலகம் அருகே முடிவடைந்தது.

Tags:    

Similar News