அரசுப்பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை குறித்த விழப்புணர்வு பேரணி

அரசுப்பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை குறித்த விழப்புணர்வு பேரணியில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Update: 2024-03-14 16:15 GMT

பேரணியில் கலந்து கொண்டவர்கள் 

 தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளியில் மாணவ, மாணவர்களின் சேர்க்கை குறித்து தமிழக அரசால் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. வருடந்தோறும் மார்ச் 1ம் தேதி முதல் அரசுப்பள்ளியில் மாணவ, மாணவியர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

அதனை முன்னிட்டு இன்று விருதுநகர் முஸ்லீம் நகராட்சி நடுநிலை அரசுப் பள்ளியில் மாணவ, மாணவியர்களின் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியில் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு ஐந்து வயது நிரம்பிய பின் பள்ளியில் சேர்ப்போம், நல் ஆளுமை வளர அரசுப்பள்ளியில் சேர்ப்போம்.

கல்வி என்பது குழந்தைகளின் அடிப்படை உரிமை,சேர்ப்போம், சேர்ப்போம் நம் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்போம் உள்ளிட்ட பதாகைகளை கையில் ஏந்திய படி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

முன்னதாக அரசுப்பள்ளியில் புதிதாக சேர்ந்த 46 மாணவ, மாணவிகளை வரவேற்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பள்ளி சீருடை, இனிப்புகள் மற்றும் மலர் கொத்துகள் கொடுத்து வரவேற்று வாழ்த்தி உற்சாகப்படுத்தினார்.

Tags:    

Similar News