100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி !

ராசிபுரத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2024-04-13 09:42 GMT

 விழிப்புணர்வு 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஜேசிஐ மெட்ரோ, வாசவி கிளப் ராசிபுரம், வாசவி கிளப் வனிதா ராசிபுரம் இணைந்து நடத்தும் தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் இருந்து துவங்கிய பேரணி பழைய பஸ் நிலையம், கடைவீதி வழியாக சென்று புதிய பஸ் நிலையம் பகுதியில் நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தில் 100% வாக்களிப்போம், வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை, சிந்தித்து வாக்களிப்போம், விரல் மை நம் வலிமை அனைவரும் தவறாது வாக்களிப்போம் என பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக சென்றனர். இந்த பேரணியை ராசிபுரம் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் முத்துராமலிங்கம், ராசிபுரம் காவல் ஆய்வாளர் செல்வராஜ், வட்டாட்சியர் சரவணன் ஆகியோர் கொடியசைத்து துவக்கிவைத்தனர். இதில், JCI மண்டல இயக்குனர் கிருபாகரன், மாவட்ட துணை கவர்னர் ஹரிஹரவெங்கட்ராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். JCI ராசிபுரம் மெட்ரோ சதிஸ்குமார், jci.com.பூபதி, VC ராசிபுரம் சுரேஷ் பாலாஜி, VC வனிதா ராசிபுரம் சந்த்யா, மற்றும் சதீஷ், சசிரேகா உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News