பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு பேரணி
Update: 2023-11-21 07:39 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழினி கொடியசைத்து துவங்கி வைத்தார். திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தீபா முன்னிலை வகித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பேரணியில் கலந்து கொண்டு பெண் குழந்தைகளை கல்வி கற்க வைப்போம் ,பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி வந்தனர். படிக்க வைப்போம், படிக்க வைப்போம் பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம், பாதுகாப்போம் பாதுகாப்போம் பெண் குழந்தைகளை பாதுகாப்போம்,என்று முழக்கங்கள் எழுப்பிய படி வந்தனர், திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய பேரணி புதிய பேருந்து நிலையம் ,பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை வழியாக மீண்டும் பள்ளியை அடைந்தது. நிகழ்ச்சியில் அனைத்து மகளிர் காவல் நிலைய துணை ஆய்வாளர் சியாமளா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.