காஞ்சியில் வீடு வீடாக அயோத்தி கும்பாபிஷேக அழைப்பிதழ்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழை விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் வீடு வீடாக வழங்கினர்.

Update: 2024-01-04 01:23 GMT

அழைப்பிதழ் வழங்கல் 

காஞ்சிபுரம் மாநகராட்சி, 51 வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு அயோத்தி ராமர் கோவிலில் வைத்து பூஜை செய்யப்பட்ட அட்சதை, ராமர் கோவில் படம், மற்றும் கும்பாபிஷேக அழைப்பிதழ் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கிட விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் முடிவு செய்தனர். அதன்படி மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களிடம் அட்சதை நிரப்பிய கலசம் கடந்த டிச., 29ல் வழங்கப்பட்டது.

அட்சதை கலசம் பெற்ற பொறுப்பாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள கோவிலில் வைத்து பூஜை செய்து வீடு, வீடாக சென்று கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர். அதன்படி, 22வது வார்டு பொறுப்பாளரும், காஞ்சிபுரம் மாநகராட்சி, பா.ஜ., தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல்குமாரிடம் வழங்கப்பட்ட அட்சதை கலசத்திற்கு சத்யநாத சுவாமி பிரமராம்பிகை கோவிலில் வைத்து பூஜை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து 22வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் வீடு வீடாக சென்று அயோத்தி ராமர் கோவிலில் வைத்து பூஜை செய்யப்பட்ட அட்சதை, ராமர் கோவில் படம் மற்றும் கும்பாபிஷேக அழைப்பிதழை வழங்கி வருகின்றனர்"

Tags:    

Similar News