அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்; காஞ்சியில் மெகா சைஸ் கோலம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, காஞ்சிபுரம் சேக்குபேட்டை ரோட்டில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை நினைவுகூறும் வகையில் 'மெகா சைஸ்' கோலம் வரையப்பட்டுள்ளது.

Update: 2024-01-16 08:57 GMT

 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, காஞ்சிபுரம் சேக்குபேட்டை ரோட்டில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை நினைவுகூறும் வகையில் 'மெகா சைஸ்' கோலம் வரையப்பட்டுள்ளது.  

உத்திரபிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம், வரும் 22ல் நடக்கிறது. இதையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள பொதுமக்களுக்கு அயோத்தி ராமர் கோவிலில் வைத்து பூஜை செய்த அட்சதை, ராமர் கோவில் படம், ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் ஆகியவற்றை விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காஞ்சிபுரம் சேக்குபேட்டை நடுத்தெருவில், தனியார் பட்டு ஜவுளிக்கடையின் முன், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை நினைவுகூறும் வகையில் வண்ணமயமான 'மெகா சைஸ்' கோலம் வரைந்துள்ளனர்.

இதில், அயோத்தி ராமர் கோவில், அம்பு, வில்லுடன் ராமர், லட்சுமணர், சீதாதேவி மற்றும் அனுமன் உருவத்தை மெகா சைஸில் கோலமாக வரைந்துள்ளனர். இச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பாதசாரிகள், மெகா சைஸ் அயோத்தி ராமர் கோலத்தை பார்த்து வியந்து சென்றனர். 

Tags:    

Similar News