அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் - வடமாநிலத்தவர் சிறப்புப் பூஜை
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு திருப்பூர் அவிநாசி சாலையில் தனியார் அப்பார்ட்மெண்டில் வசிக்கும் வட மாநிலத்தவர்கள் ஆடல் பாடலுடன் கலச யாத்திரை எடுத்து வந்து ராமர் உருவப்படத்திற்கு சிறப்பு பூஜை செய்தனர்.
Update: 2024-01-23 03:09 GMT
அயோத்தியில், ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, இந்தியா முழுவதும் கொண்டாட்டங்கள் களை கட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அவினாசி சாலையிலுள்ள பிரைம் அபார்ட்மெண்ட்டில் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் வசித்து வரக்கூடிய நிலையில், ஆண்கள், பெண்கள் என ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் கலசங்களை எடுத்துக் கொண்டு ராமர் பாடல்களை பாடியும், ஜெய் ஶ்ரீ ராம் என்று கோஷங்கள் எழுப்பியும் உற்சாகத்துடன் நடனமாடி குடியிருப்புக்குள்ளாகவே கலச யாத்திரை எடுத்து வருகின்றனர். இதனை தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள ராமர் உருவ படத்திற்கு கலசாபிசேகம் உள்ளிட்ட பல்வேறு அபிசேகங்களும், அலங்கார பூஜையும் நடைபெறவுள்ளது. மேலும் திருப்பூர் மாநகரின பல்வேறு பகுதிகளிலுள்ள கோயில்கள், அமைப்புகள் சார்பில் பூஜை, அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.