ஐயப்ப பக்தர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
ஈரோடு அருகே டயர் வெடித்து கார் கவிழ்ந்த விபத்தில் 5 ஐயப்ப பக்தர்கள் காயமடைந்தனர்.;
Update: 2024-01-08 08:36 GMT
கவிழ்ந்த கார்
மொடக்குறிச்சி ஆலுத்துபாளையம் கிராமத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 5 பேர் ஈரோட்டில் உள்ள மற்றொரு பக்தரை அழைத்து கொண்டு சபரிமலை செல்வதற்காக பொலிரோ வாகனத்தில் வந்தனர். ஈரோடு செட்டிபாளையம் பகுதியில் வந்த போது டயர் வெடித்து சாலை தடுப்பில் மோதிய வாகனம் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வாகனம் ஓட்டி வந்த பரமசிவம் உள்ளிட்ட 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.