குளத்துப்பட்டியில் ஐயப்பன் கோயில் பஜனை விழா
குளத்துப்பட்டியில் ஐயப்பன் கோயில் பஜனை விழா நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-02 10:20 GMT
ஐயப்பன் கோயில் பஜனை விழா
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், அய்யலூர் அருகே குளத்துப்பட்டியில் வசித்து வருபவர் மணிகண்டன் (எ) ஐயப்பன் குருசாமி. தமது மகன் கைக்குழத்தையாக இருந்த காலத்திலிருந்து தமது மகனோடு சபரிமலைக்கு சென்று வருவதால் இவரது மகனுக்கு இது 18-வது வருடம் ஆகும்.
அதையொட்டி தமது சொந்த ஊரான குளத்துப்பட்டியில் நேற்று இரவு மாபெரும் பஜனையை நடத்தினார். இதில் அய்யலூர் பகுதி மட்டுமில்லாது வெவ்வேறு பகுதிகளிலுமிருந்து நூற்றுக்கணக்கான குருசாமிகளும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்களும் வந்து குவிந்தனர். இறுதியில் எல்லோருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.