பாபநாசம் - அரியலூர் புதிய பேருந்து சேவை துவக்கம்

பாபநாசம் - அரியலூர் இடையே நேரடி பேருந்து போக்குவரத்து சேவையை சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Update: 2024-03-04 05:59 GMT

பேருந்து சேவை துவக்கம் 

 பாபநாசம் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான பாபநாசம் - அரியலூர் இடையே நேரடி பேருந்து போக்குவரத்து சேவை துவக்க வேண்டும் என பாபநாசம் ரயில் பயணிகள் சங்கம் பாபநாசம் வர்த்தக சங்கம் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் எம் எச் ஜவாஹிருல்லா வலியுறுத்தி பேசினார்.

அவரது கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் உத்தரவின்படி, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் வழிக்காட்டுதலின் படியும் பாபநாசம் பேருந்து நிலையத்திலிருந்து அரியலூர் ரயில் நிலையம் வரை செல்லும் அரசுப் பேருந்து சேவை துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் சு. கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார்.

மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் பாபநாசம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி கபிலன் பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டை மேலாண் இயக்குனர் மகேந்திர குமார் கும்பகோணம் மண்டல பொது மேலாளர் இளங்கோவன் துணை மேலாளர் செந்தில்குமார் கிளை மேலாளர் சிவமயில் வேலன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

கும்பகோணம் நகர் 1 கிளை தடம் எண். 463B, புதிய பேருந்து கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து காலை 7.00 மணிக்கு நடை எடுத்து பாபநாசத்தில் 7.35 மணிக்கு புறப்பட்டு கபிஸ்தலம் -திருவையாறு -அரியலூர் புகைவண்டி நிலையம் என 4 நடைகளாக இயக்கப்படும் தடத்தில் புதிய பேருந்தினை பாபநாசம் பேருந்து நிலையத்திலிருந்து பாபநாசம் தொகுதி, சட்டமன்ற உறுப்பினர் முனைவர்.எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

இந்நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலாளர்கள் கோவி.அய்யாராசு, துரைமுருகன், பாபநாசம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், பாபநாசம் பேரூர் செயலாளர் கபிலன், பயணிகள் சங்க தலைவர் ரயில் சரவணன், பாபநாசம் வர்த்தக சங்க தலைவர் குமார், மமக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் முஹம்மது மைதீன், மாவட்ட பொருளாளர் பொகர்தீன், பாபநாசம் ஒன்றிய தலைவர் கலீல் ரஹ்மான், பாபநாசம் பேரூர் செயலாளர் ஜாஹிர் உசேன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், ஓட்டுனர்கள் நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பாபநாசத்தில் இருந்து அரியலூருக்கு புறப்பட்ட பேருந்தில் கல்யாணசுந்தரம் எம்பி இராமலிங்கம் எம்பி, ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ ஆகியோர் சிறிது தூரம் பயணம் செய்தனர். இந்தப் பேருந்து காலை 7.30 மணிக்கு பாபநாசத்தில் புறப்பட்டு , 9:30 மணிக்கு அரியலூர் ரயில் நிலையம் வரை சென்று சேரும் இதே போல் மாலை 3:30 மணிக்கு பாபநாசத்தில் புறப்பட்டு 5.30 மணிக்கு அரியலூர் ரயில் நிலையம் வரை சென்று சேரும் இந்த புதிய பேருந்து சேவை வழியாக காலை 10 மணிக்கு அரியலூர் சென்னை வைகை அதிவிரைவு வண்டியில் சென்னை செல்லவும் மறு மார்க்கத்தில் சென்னையிலிருந்து அரியலூர் வந்து சேரும் அதி விரைவு வண்டிகளில் பயண மேற்கொள்ளும் ரயில் பயணிகள் பாபநாசம் கும்பகோணம் பகுதிகளுக்கு வந்துசேர மிக பயனுள்ளதாக இருக்கும் என திருச்சிராப்பள்ளி தென்னக ரயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினர் சரவணன் தெரிவித்தார்

Tags:    

Similar News