சிறுமிக்கு ஆண் குழந்தை - போலீசார் விசாரணை

சேலத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட 17 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. புகாரின் பேரில் குழந்தை திருமணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Update: 2023-12-26 04:43 GMT

பைல் படம் 

சேலம் சிவதாபுரம் பகுதியை சேர்ந்த திருமணமான 17 வயது சிறுமி ஒருவர் பிரசவத்துக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இரவில் ஆண் குழந்தை பிறந்தது. சிறுமிக்கு குழந்தை பிறந்தது குறித்து ஆஸ்பத்திரி சார்பில் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் குழந்தை திருமணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News