மயிலாடுதுறை கடைவீதியில் துர்நாற்றம்

மயிலாடுதுறை கடைவீதியில் பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறி துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Update: 2024-01-28 14:24 GMT

கழிவுநீர் தேங்கியுள்ள சாக்கடை

மயிலாடுதுறை கறார் ஜவுளிக் கடை வாசலில் புதிதாக பைப் லைன் போடப்பட்ட பாதையில் தேங்கி துர்நாற்றம் வீசும் பாதாள சாக்கடை கழிவு நீர், எதிரே உள்ள ஆள் நுழைவு தொட்டியில் இணைக்கப் பட்டுள்ள குழாயிலிருந்து வழிந்து நிற்கிறது.

இந்த பைப் லைனைப் போட்டுள்ளது, நகராட்சி பொறியாளர் கட்டுப்பாட்டில் இயங்கும் நகராட்சி பாதாள சாக்கடை பராமரிப்பு நிர்வாகம், தனியார் நகை வர்த்தக நிறுவனத்திற்கு ஆதரவாக அவசர கோலத்தில் செய்யப்பட்ட இந்த செயலால் அப்பகுதியே துர்நாற்றம் வீசுகிறது என பேராசிரியர் முரளி புகார் கூறியுள்ளார்.

மாவட்ட ஆட்சியரின் பார்வைக்கு செல்லுமா அல்லது அதற்குள் சரி செய்யப்படுமா என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News