திருப்பூரில் பாஜக கட்சியினரின் முன் ஜாமின் மனு தள்ளுபடி!

திருப்பூரில் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த பெண்மணியை தாக்கிய பாஜக கட்சியை சார்ந்தவர்கள் மூவரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-04-22 11:17 GMT

திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்த பாஜகவினரிடம் திராவிடர் விடுதலை கழக மாவட்ட அமைப்பாளர் சங்கீதா என்பவர் ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பியதால் வாக்குவாதம். அநாகரிகமாக பேசி சங்கீதாவை தாக்கியதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆத்துப்பாளையம் பகுதியில் நேற்று இரவு பாஜக வேட்பாளர் ஏ பி முருகானந்தத்திற்கு ஆதரவாக பாஜகவினர் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர் அப்போது அந்த பகுதியில் கடை வைத்து நடத்தி வரும் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த மாவட்ட அமைப்பாளர் சங்கீதா என்பவர் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தவர்களிடம் ஜி‌.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.

இதில் ஏற்பட்ட வாக்குவாதம் ஒருகட்டத்தில் முற்றி தகாத வார்த்தைகளால் பேசி சங்கீதாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடைபெற்ற போது சங்கீதா தனது கைபேசியில் பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சங்கீதா அளித்த புகாரின் பேரில் 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட பாஜகவை சேர்ந்த சின்னசாமி சீனிவாசன் மற்றும் ரவிக்குமார்  ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் சின்னசாமி சீனிவாசன் மற்றும் ரவிக்குமார் முன்ஜாமின் கேட்டு மனு அளித்திருந்தனர் அந்த வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தத. பாதிக்கப்பட்டவர் தரப்பில் வழக்கறி0ர்கள் பாப்பா மோகன், பாண்டியன், சையது இப்ராகிம் ஆஜராயினர்.  குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்க்ககூடாது. மேலும் அவர்களை கைது செய்து விசாரிக்க வேண்டும் என வாதிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி சொர்ணம் நடராஜன்  விசாரணைக்கு பின் மூவரின்  முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.

Tags:    

Similar News