அபாய நிலையில் பாலாற்று தரைப்பாலம்: இரும்புலிச்சேரி மக்களுக்கு எச்சரிக்கை

அபாய நிலையில் பாலாற்று தரைப்பாலம் உள்ளதால் இரும்புலிச்சேரி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-05 15:20 GMT
அபாய நிலையில் பாலாற்று தரைப்பாலம் இரும்புலிச்சேரி மக்களுக்கு எச்சரிக்கை
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

செங்கல்பட்டு மாவட்டம்,திருக்கழுக்குன்றம் அடுத்த இரும்புலிச்சேரி, பாலாறு இரண்டாக பிரிந்து கூடும் தீவு பகுதியில் உள்ளது. அப்பகுதியை, நெரும்பூர் - வாயலுார் சாலை வழியே, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பகுதி களுடன் இணைக்க, இரும்புலிச்சேரி பாலாற்றில் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டிய தரைப்பாலம் பயன்பட்டது.

கடந்த 2015ம் ஆண்டு வெள்ளப்பெருக்கில் பாலம் இடிந்து, அப்பகுதி துண்டிக்கப்பட்டது. அதன்பின், தற்காலிக தீர்வாக, பழைய வீராண திட்ட கான்கிரீட் குழாய்கள் வைத்து, மண்பாதையுடன் தரைப்பாலம் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டு வெள்ளப்பெருக்கின் போதும் பாலம் சேதமடைந்து வருகிறது.

இதையடுத்து, அப்பகுதியினர் எடையாத்துார் - பாண்டூர் பாலம் வழியே சுற்றிச் செல்வர். தற்போதும், கனமழையால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, மண்பாதை அரிக்கப்பட்டு பள்ளம் ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு அதிகரிப்பதால், பாலம் அடித்துச் செல்லப்படும். இதை தவிர்க்க, பாலத்தில் யாரும் செல்ல வேண்டாமென, வருவாய்த் துறையினர் எச்சரித்துள்ளனர்.

Tags:    

Similar News