வெங்காயம் விலை அதிரடியா குறைவு.!!
பல்லாரி வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைய வாய்ப்புள்ளது.
By : King 24x7 Website
Update: 2023-10-31 07:00 GMT
திண்டுக்கல்லுக்கு பல்லாரி வரத்து அதிகரித்துள்ளதால் ஓரிரு நாட்களில் விலை குறைய வாய்ப்பிருக்கிறது. அதே நேரத்தில் தட்டுபாட்டின் காரணமாக அதிக விலையில் கொள்முதல் செய்த வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.திண்டுக்கல், சுற்றுப் பகுதிகளில் பல்லாரி அதிகம் விளைவிக்கப்படுகிறது.இதனால் திண்டுக்கல் புறநகரில் இதற்கென தனியாக மார்க்கெட் உள்ளது. திங்கள், புதன், வெள்ளி என வாரத்தில் 3 நாள் கூடுகிறது. இங்கு வரும் மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச்சென்று விற்பனை செய்கின்றனர். இது மட்டுமின்றி வெளிநாடு, மாநிலங்களுக்கும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. பல்லாரி பொறுத்தவரையில் ஆந்திரா கர்னுார், பெங்களூர், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் மாநிலங்களில் இருந்து லாரிகளில் திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு கொண்டுவரப்படுகிறது.தசாரா போன்ற பண்டிகைகள் காரணமாக 10 நாட்களாக வரத்து குறைந்து பல்லாரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் ரூ.30ஐ தாண்டாத இதன் விலை ரூ.60ஐ தொட்டது. இதுவே கடைவீதிகளுக்கு வரும்போது ரூ.80 வரை விற்பனையானது.இந்நிலையில் நேற்று ஒருலாரிக்கு 22 டன் என 20 லாரிகளில் பல்லாரிகள் கொண்டு வரப்பட்டன. இதனால் பல்லாரி விலை குறைவாய்ப்பு உள்ளதால் அதிக விலைக்கு கொள்முதல் செய்த வியாபாரிகள் கவலையில் உள்ளனர்.