மணிமுத்தாறு அருவியில் இரண்டாவது நாளாக தடை விதிப்பு
கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மணிமுத்தாறு அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.;
Update: 2024-06-27 03:44 GMT
கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மணிமுத்தாறு அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்தும் அதிகரித்தது. இந்த நிலையில் நேற்று சுற்றுலா பயணிகளுக்கு மணிமுத்தாறியில் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றும் (ஜூன் 27) இரண்டாவது நாளாக தடை தொடர்வதாக வனத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.