சங்கரன்கோவில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
சங்கரன்கோவில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்;
சங்கரன்கோயில் நகராட்சி தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் சார்பாக நகராட்சி ஆணையாளர் வழிகாட்டுதலின்படி சுகாதார அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர் தலைமையில் இன்று(13-12-2025) ஆரம்ப நகர்ப்புற சுகாதார மையத்தில் வைத்து தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. மேலும் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் தூய்மை இந்தியா திட்ட இயக்க மேற்பார்வையாளர் மற்றும் பரப்பரையாளர்கள் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.