தென்காசி நகராட்சி அலுவலகத்தில் கசடு கழிவு மேலாண்மை ஆய்வு கூட்டம்

தென்காசி நகராட்சி அலுவலகத்தில் கசடு கழிவு மேலாண்மை ஆய்வு கூட்டம்;

Update: 2025-12-13 17:56 GMT
தென்காசி நகராட்சி சுகாதார அலுவலர் அறிவுறுத்தலின்படி செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகன உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கான கசடு கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு கூட்டம் (ERSU) இன்று(13-12-25) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கசடு கழிவு நீரை தென்காசி நகராட்சி மத்தளம் பாறை ரோடு FSTP மையத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது மற்றும் கழிவுநீர் அகற்றும் வாகனத்தில் உள்ள பணியாளர்கள் பாதுகாப்பு கவசங்கள் மற்றும் உபகரணங்கள் அணிந்து பணி செய்ய வேண்டும் என்றும், இரவு நேரங்களில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடக்கூடாது எக்காரணம் கொண்டும் பணியாளர்கள் நச்சு தொட்டிக்குள் இறங்கி பணி செய்யக்கூடாது என்றும் சுகாதார ஆய்வாளரால் அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில் சுகாதார ஆய்வாளர், செப்டிக் டேங்க் உரிமையாளர்கள், பணியாளர்கள், ஓட்டுநர்கள், மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

Similar News