கடையநல்லூரில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கும் பணி துவக்கம்
கடையநல்லூரில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கும் பணி துவக்கம்;
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிக்குட்பட்ட 27 ஆவது வார்டு அருள்மிகு முப்புடாதி அம்மன் திருக்கோயில் அருகில் ரூபாய். 12 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கும் பணி மற்றும் 2 இடங்களில் போர்வெல் அமைத்து சின்டெக்ஸ் தொட்டி அமைக்கும் பணி மற்றும் பழுதடைந்த சாலையை சீரமைக்கும் பணியினை கடையநல்லூர் நகர மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது. உடன் 27 ஆவது வார்டு நகரமன்ற உறுப்பினர் லாலா சண்முகசுந்தரம் மற்றும் குமார், 27 வது வார்டு கழக செயலாளர் முத்து மற்றும் வார்டு பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.