புளியஞ்சோலை சுற்றுலா தலத்திற்கு செல்ல தடை

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள புளியஞ்சோலை சுற்றுலா தலத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

Update: 2024-05-18 14:54 GMT

சுற்றுலா தலம் செல்ல தடை

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள புளியஞ்சோலை சுற்றுலா தலமாக அமைந்துள்ளது புளியஞ்சோலை சுற்றுலா தலம் பொதுமக்களுக்கு ஒரு வரப்பிரசதமாகும்.

இங்கு நாமக்கல் தா.பேட்டை ,சேலம், ஆத்தூர், மல்லியக்கரை, தம்பம்பட்டி, பெரம்பலூர். புதுக்கோட்டை,தஞ்சாவூர், கரூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். தற்போது கொல்லிமலையில் பெய்த கனமழையின் காரணமாக புளியஞ்சோலை பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.புளியஞ்சோலை நாட்டம் மடு பகுதியில் குளிக்கும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள பாறைகளில் மோதி அடிக்கடி உயிரிழப்பு ஏற்படுகிறது. வனத்துறையினர் அப்பகுதியை கற்களை கொண்டு பொக்லின் இயந்திரம் மூலம் தடுப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதனால் அப்பணிகள் முடியும் வரை சுற்றுலா வரும் பயணிகள் இப்பகுதியில் சென்று குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளர்.

Tags:    

Similar News