வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி டிரோன் பறக்க தடை
செட்டிகரை அரசு பொறியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை சுற்றியுள்ள இரண்டு கிலோமீட்டருக்கு டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் கடந்த 19ம்தேதி நடந்தது. தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப் பட்டி, அரூர்,மேட்டூர் 6 சட்டமன்ற தொகுதிகளில் 81.20 சதவீத வாக்குப்பதிவானது. இந்த வாக் குப்பெட்டிகள் தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப் பட்டுள்ளது. சட்டமன்ற தொகுதிவாரியாக பிரித்து ஸ்டிராங் ரூமில் அரசியல் கட்சியின் முன்னிலையில் பாதுகாப்பாக வைத்து, சீல் வைக்கப்பட்டது.
வாக்குப் பெட்டிகள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை சுற்றி சிஆர்பிஎப் போல் சார் 24 பேர், தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு போலீசார் 24 பேர், ஆயு தப்படை காவலர்கள் 24 பேர், உள்ளூர் போலீசார் 150 பேர் என மொத்தம் 222 போலீசார் ஒரு நாளைக்கு 3 ஷிப்ட் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனரர். 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வரும் ஜூன் 4ம்தேதி வாக்கு எண்ணப்படு கிறது. இந்நிலையில், தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தர்மபுரி மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் கூறுகையில்,தர்மபுரி தேர்தல் சம்மந்தமாக வாக்கு பெட்டி இயந்திரங்கள் வைத்துள்ள செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி அருகாமையில் சுற்றியுள்ள பகுதிகளில், 2 கிலோ மீட்டர் வரை டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த பகுதிகளில் எந்தவித டிரோன்களும் பறக்கக் கூடாது என்றார்.