சட்டவிரோத மது விற்பனைக்கு தடை - கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு.

Update: 2023-12-12 05:40 GMT

மனு அளிக்க வந்த கிராம மக்கள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பெரம்பலூர் மாவட்டம் பில்லங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில் தங்கள் கிராமப் பகுதியில் அரசின் அனுமதி இன்றி மூன்று இடங்களில் மது விற்பனை நடந்து வருவதாகவும், தங்கள் கிராமத்தில் பொதுமக்கள் நாங்கள் முயற்சி செய்தும் பலமுறை புகார் மனு கொடுத்தும், நடவடிக்கை இல்லை என்பதால் அனுமதி இன்றி செயல்படும் மது விற்பனை தடை செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கள்ள சந்தையில் மது விற்பனை செய்பவர்களின் பெயர் விலாசத்துடன் குறிப்பிடப்பட்ட மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என கிராம மக்களிடம் தெரிவித்தார்.
Tags:    

Similar News