தொழில் முனைவோருக்கான வங்கி கடன் வழிகாட்டுதல் முகாம்
தருமபுரி மாவட்ட அளவிலான வங்கிக்கடன் வழிகாட்டுதல் முகாம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் வரும் 23.02.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் நடத்தப்படவுள்ளது.
தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் .சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது. புதிய தொழில் முனைவோர்கள் ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு மானியத்துடன் கூடிய சுயதொழில் கடன் திட்டங்களை மாவட்ட தொழில் மையம் மற்றும் பிற அரசு துறைகள் மூலமாக செயல்படுத்தி வருகிறது. இதன்பொருட்டு, புதிதாக உற்பத்தி,
சேவைமற்றும்வியாபாரம் சாந்த தொழில்கள் தொடங்க ஆர்வமுடைய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களுக்கு தேவையான கடன் வசதியினை வங்கிகள் மூலம் ஏற்படுத்தி தரும் வகையிலும் மாவட்ட அளவிலான வங்கிக்கடன் வழிகாட்டுதல் முகாம்,
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் வரும் 23.02.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் நடத்தப்படவுள்ளது. இந்த முகாமில் மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மகளிர் திட்டம், போன்ற துறைகள், அனைத்து வங்கிகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும் அரசு UYEGP, PMEGP.AABCS.NEEDS.PMFME போன்ற திட்டங்களின் கீழ் தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வங்கியின் மூலம் மானியத்துடன் கூடிய கடன்கள் பெற்று சுயமாக தொழில்கள் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தென்னை நார் சார்ந்த தொழில்கள், ஆயத்த ஆடைகள் தைத்தல், ரைஸ் மில். என்ஜினியரிங் தொழில்கள், பிளாஸ்டிக் இன்ஜக்சன் மோல்டிங், சிலக் ரீலிங், ஸ்பின்னிங் மில், பவர்லூம், கட்டுமானப் பொருட்கள், மளிகைக் கடை, வணிகப் பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை. அழகு நிலையம், உடற்பயிற்சிக் கூடம், வாடகை கார், ஆட்டோ, லாரி, வேன், பேருந்து, காங்கிரீட் மிக்சர், ஆம்புலன்ஸ், ரிக் போரிங்,
குளிர்சாதன ட்ரக், கால்நடை வளர்ப்பு மற்றும் இதர தொழில்கள் துவங்க வாய்ப்பு உள்ளது. மேலும் விவரங்கள் பெற 8925533941,8925533942 8925533940 தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.மற்றும் இதுசமயம் தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்களின் கீழ் பயன்பெறலாம். இவ்வாறு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்