சிவகங்கை அருகே மோசடியில் ஈடுபட்ட வங்கி மேலாளர் கைது

சிவகங்கை அருகே ஆயுள் காப்பீட்டு தொகையை கையாடல் செய்த வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-04-14 14:11 GMT

கைது செய்யப்பட்ட வங்கி மேலாளர்

சிவகங்கை மாவட்டம், சாத்தரசன்கோட்டையைச் சேர்ந்த தனிக்கொடி மனைவி கலைச்செல்வி. இவர் கடந்த மார்ச் மாதம் சிவகங்கை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அவரது கணவரின் ஆயுள்காப்பீட்டுத் தொகை ரூ.1,00,000- கடந்த டிசம்பர் 2023 அன்று EASF Small Finance வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்டதாக புகார் கொடுத்திருந்தார்.

இந்த புகார் சம்பந்தமாக பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை செய்ததில் மானாமதுரையில் உள்ள EASF Small Finance வங்கியின் கிளை மேலாளர் முத்துகுமார் என்பவர் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர் EASF (Small Finance) சிறு நிதி வங்கியின் கிளை மேலாளராக கடந்த 9 ஆண்டுகளாக ஜனவரி 2024 வரை பணியாற்றியுள்ளார்.

இவர் புகார்தாரரின் வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை கணக்குதாரருக்கு தெரியாமல் தனது நிர்வாக அதிகாரத்தை பயன்படுத்தி மாற்றியுள்ளார். இப்படி மாற்றப்பட்ட அலைபேசி எண்ணை பயன்படுத்தி முறைகேடாக ரூ.1,00,000- பணத்தை கையாடல் செய்ததாக சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

புகார்தாரர் இழந்த ரூ.1,00,000 முழுத்தொகையையும் திரும்ப பெற்று சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கு தற்போது புலன் விசாரணையில் இருந்து வருவதாக சைபர் கிரைம் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்

Tags:    

Similar News