வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

குமாரபாளையம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.;

Update: 2024-05-02 08:14 GMT

புதிய நிர்வாகிகள் 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். நேற்று குமாரபாளையம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் தலைவர் சரவணராஜன் தலைமையில் நடந்தது. இதில் 2024 – 2025ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய தலைவராக சரவணராஜன், செயலராக நடராஜன், பொருளராக நாகப்பன் உள்ளிட்ட பலர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். புதிய உறுப்பினர்கள் இணைக்கப்பட்டனர்.

Advertisement

பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி நீதிமன்ற புறக்கணிப்பு, மாவட்ட நீதிபதியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஆகியன நடத்தப்பட்ட நிலையில், கோரிக்கை நிறைவேறும் சூழ்நிலை உருவாகியுள்ளதால் பணி புறக்கணிப்பில் ஈடுபட்ட வக்கீல்கள், நேற்றுமுன்தினம் முதல் பணிக்கு திரும்பினர். இதன்படி, இவர்கள் கோரிக்கையான இரு பாலருக்கான உடை மாற்றும் இடம், உணவு உண்ணும் இடம், மற்றும் கழிப்பிடம், ஆகியன, சங்கம் சார்பில் கட்டிக்கொள்ள, மாவட்ட நீதிபதி வசமிருந்து உத்திரவு கடிதம் கிடைக்கப்பெற்றவுடன், கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய நிர்வாகிகளுக்கும், புதிய உறுப்பினர்களுக்கும் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News