பரமத்தியில் வழக்கறிஞரஃகள் சங்கம் ஆர்ப்பாட்டம்.

பரமத்தியில் மத்திய அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2024-06-22 01:43 GMT

பரமத்தியில் மத்திய அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.


நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா, பரமத்தி ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தின் முன்பு குற்றவியல் சட்டங்களின் பெயரை மத்திய அரசு இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் மாற்றி அமல்படுத்தும் முடிவை கண்டித்து வழக்கறிஞர்கள் சங்க சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு குற்றவியல் சட்டங்களின் பெயரை இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் மாற்றி சட்டங்களை முழுவதுமாக மாற்றிமைத்து  அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளதை தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. மேற்படி சட்டங்களை அமல்படுத்தும் முடிவை நிறுத்தி வைத்து திரும்பப்பெற வலியுறுத்தியும், தமிழகத்தில் தொடர்ந்து வழக்கறிஞர்கள் மிரட்டப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்ந்து வருவது வழக்கறிஞர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு  பாதுகாப்பற்ற சூழல் உள்ளதை தமிழக முதல்வரும், மத்திய அரசும்  தடுத்திடும் வகையில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் பரமத்தி ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தின் முன்பு வழக்கறிஞர்கள்  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் பரமத்தி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மோகன், செயலாளர் கோபி, பொருளாளர் அகிலாண்டேஸ்வரி மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News