பிச்சை எடுத்து தர்ணா போராட்டம்
Update: 2023-12-08 10:12 GMT
திண்டுக்கல்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் ஏ.எம்.சி.ரோட்டில் பிச்சை எடுத்து தர்ணா போராட்டம் நடத்திய மக்கள் நல பணியாளர்கள் 650 பேரை போலீசார் கைது செய்தனர். தி.மு.க.,அரசால் பணி நியமனம் செய்யப்பட்டு அ.தி.மு.க.,அரசால் 3 முறை பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் பணியாளர்களுக்கு 2014ல் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த வேண்டும், இறந்த பணியாளர்களுக்கு நிவாரணத்தொகை ரூ. 5லட்சம் வழங்க வேண்டும் என பல கோரிக்கையை வலியுறுத்தி பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர். இதையடுத்து காமராஜர் சிலை முன்பு ரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.