பேகாரஅள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா !
காரிமங்கலம் அருகே உள்ள பேகாரஅள்ளி கிராமத்தில் அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
By : King 24x7 Angel
Update: 2024-04-22 06:51 GMT
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி காரிமங்கலம் அருகே பேகாரஅள்ளி கிராமத்தில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு கலச நீராட்டுதல் நான்காம் கால வேள்வி பூஜை வழிபாட்டுடன் யாக சாலையில் இருந்த புனித நீர் கலச நீரை ஊர் கவுண்டர்கள் மந்திரி கவுண்டர்கள் தர்மகர்த்தா மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் தங்கள் தலைமீது எடுத்துச் சென்ற கோவில் உச்சியில் உள்ள கலசத்துக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்து தீபாரதனை காட்டினார். பின்பு பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. ஸ்ரீசாமுண்டீஸ்வரி அம்மன் பல்வேறு திரவியங்கள் அபிஷேகங்கள் செய்யப்பட்ட பூக்களால் அலங்கரிக்கப் பட்டு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் அன்னதான வழங்கப்பட்டது.