பாரதிய ஜனதா கவுன்சிலர் மகன் விபத்தில் பலி
சுசீந்திரம் அருகே பாரதிய ஜனதா கவுன்சிலர் மகன் விபத்தில் பலி
Update: 2024-03-04 11:17 GMT
கன்னியாகுமரிமாவட்டம் சுசீந்திரம் பார்கவி நகரை சேர்ந்தவர் வீரபத்திரன். இவர் சுசீந்திரம் பேரூராட்சி 10-ம் வார்டு கவுன்சிலராக உள்ளார். இவரது மகன் விஜய் (26) டிப்ளமோ முடித்துள்ளார். இவர்கள் வீடு சுசீந்திரம் புறவழிச்சாலை பகுதியில் உள்ளது. நேற்று இரவு 10 மணி அளவில் வீட்டில் சாப்பிட்டு விட்டு விஜய் வெளியே சென்றார். அப்போது புறவழிச் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் விஜய் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட விஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சத்தம் கேட்டு உறவினர்கள் சென்றபோது விஜய் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இது தொடர்பாக சுசீந்திரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.