ஆட்டோ திருடியதாக பாரதிய ஜனதா பிரமுகர் கைது 

மண்டைக்காடு அருகே ஆட்டோ திருடியதாக பாரதிய ஜனதா பிரமுகர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2024-06-14 17:25 GMT

கைது

கன்னியாகுமரி மாவட்டம் ,மண்டைக்காடு அருகே கொத்தனார் விளையை சேர்ந்தவர் தங்கதுரை மகன் குமார் (38). இவர் ஆட்டோ டிரைவர். கடந்த ஆண்டு மணிகண்ட என்பவரிடம் இருந்து ஆட்டோவை விலைக்கு வாங்கி ஓட்டி வந்தார்.        

இந்த நிலையில் குமார், சம்பவ தினம் மதியம் தனது ஆட்டோவை வீட்டு முன்பு  நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்றுள்ளார். மாலையில் வந்து பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் ஆட்டோவை திருடி சென்றது தெரியவந்தது.       

Advertisement

இது குறித்து குமார் உடனடியாக குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான  ஆட்டோவை தேடி வந்தனர். இது தொடர்பாக நடத்திய விசாரணையில் குமாருக்கு சொந்தமான ஆட்டோவை குறும்பனை பகுதி சேர்ந்த சுதன் ராஜ் என்ற டிக்சன் (35) என்பவர் திருடியது தெரிய வந்தது.      

இதை எடுத்த உடனே சுதன்ராஜை கைது செய்த போலீசார், ஆட்டோவை மீட்டு,  இரணியல் கோர்ட்டில் ஆஜர் படுத்திவிட்டு சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட சுதன்ராஜ் குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி  மீனவர் அணி பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News