பத்ரேஸ்வரி அம்மன் கோவிலில் தென் வீதி ஆராட்டு
கூட்டாலுகமூடு பத்ரேஸ்வரியம்மன் கோவிலில் நடைபெற்ற தென் வீதி ஆராட்டு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
By : King 24X7 News (B)
Update: 2024-05-10 05:13 GMT
கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவும் இந்து சமய மாநாடு கடந்த 10 நாட்கள் நடைபெற்றன.நிறைவு நாளில் அம்மன் தென் வீதி ஆறாட்டு நடைபெற்றது. சிங்காரி மேளம் பஞ்ச வாத்தியத்துடன், யானைகள் பூக்காவடி, தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட வாகனங்களுடன் பக்தர்கள் புடை சூழ அம்மன் தேங்காப்பட்டணம் கடலில் ஆராட்டு நடந்தது.
பின்னர் தேவஸ்தானம் வந்தடைந்தது. அம்மன் தென்வீதி ஆறாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.மாலயில் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் துணைத் தலைவர் பத்மகுமார் தலைமையில் இந்து சமய மாநாடு நடந்தது பின்னர் போட்டி சிங்காரி மேளமும், நள்ளிரவு 12 மணிக்கு திருக் கொடியிறக்குதல் நடந்தது திருக்கொடியிறக்குதலை தொடர்ந்து வாணவேடிக்கை நடந்தது.