தென்காசி அருகே சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

தென்காசி அருகே சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது

Update: 2024-03-14 01:20 GMT

பூமி பூஜை

தென்காசி மாவட்டம் தென்காசி அருகே பெத்தநாடார்பட்டி ஊராட்சி, நவநீத கிருஷ்ணபுரத்தில் ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூபாய் 7 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைப்பதற்காக பூமி பூஜை நிகழ்ச்சி கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் ராதா குமாரி, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணி கலைச்செல்வன், துணைத் தலைவர் ஜெயராணி அந்தோணிராஜ் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News