இந்திரா நகர் பகுதியில் பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை
திருப்பூர் மாநகராட்சி 1-வது வார்டு இந்திரா நகர் வடக்கு 1,2,3,4,5மற்றும் 7-வது குறுக்கு வீதிகளில் மழை நீர் வடிதல் மற்றும் சிறுபாலம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டலத்திற்குட்பட்ட 1-வது வார்டு இந்திரா நகர் வடக்கு 1,3,4,5,6,7,8,9,10 வீதிகள் மற்றும் இந்திரா நகர் வடக்கு 1,2,3,4,5 மற்றும் 7 வது குறுக்கு வீதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைத்தல் மற்றும் இந்திரா நகர் பகுதியில் கழிவு நீர் சேகரிப்பு தொட்டி மற்றும் பம்ப் பொருத்துதல் மற்றும் இந்திரா நகர் பகுதியில் புதிய மின்மோட்டார் அறை சுட்டுதல் மற்றும் சுற்றுச்சுவர் அமைத்தல் பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார் , மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் , துணை மேயர் ஆர் பாலசுப்ரமணியம் , பகுதி கழகச் செயலாளர் ராமதாஸ் , மண்டல தலைவர்உமாமகேஸ்வரிவெங்கடாஜலம் , வட்ட கழக செயலாளர் மகேந்திரன் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.