பூதப்பாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் சஸ்பெண்ட்
கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் லஞ்ச வழக்கில் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
குமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே உள்ள திட்டுவிளையை சேர்ந்த சுந்தரம் (67). இவர் தனது குடும்ப சொத்தை பாகப்பிரிவினை செய்து, வீட்டின் உரிமையை தனது பெயருக்கு மாற்றக்கோரி பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த 3ஆம் தேதி விண்ணப்ப அளித்தார்.
இதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியம் என்பவர் 10 ஆயிரம் ௹பாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து லஞ்சம் கொடுத்த போது, பாலசுப்ரமணியத்தை லஞ்ச ஒழிப்பு ஏடிஎஸ்பி டாக்டர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.பின்னர் அவர் அலுவலகத்திலும் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதை அடுத்து அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 7 (எ) இல் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பாக விசாரணை அறிக்கை குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் சென்னை தலைமை செயலகத்திற்கு அனுப்பி உள்ளனர். இதற்கு இடையே கைதான பாலசுப்பிரமணத்தை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.