அறிவுசார் மைய கட்டிடம் கட்ட பூமி பூஜை

ஊத்தங்கரை அறிவுசார் மைய கட்டிடம் கட்ட பூமி பூஜையை பேரூராட்சி தலைவர் அமானுல்லா துவக்கி வைத்தார்.

Update: 2023-10-29 01:16 GMT

பூமி பூஜை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சி 3 வது வார்டு கவர்னர் தோப்பு பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2023 24 நிதியாண்டில் 1 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில், அறிவு சார் மைய கட்டடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நேற்று நடந்தது. பேரூராட்சித் தலைவர் பா.அமானுல்லா பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். இதில் ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலர் பா.சுப்ரமணியன்,பேரூராட்சி துணைத் தலைவர் கலைமகள் தீபக்,மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கதிர்வேல்,குமரேசன், சிவன்,கனகேஸ்வரி, சுமத்ரா,நிர்மலா,சாதிக் பேகம்,ஒப்பந்ததாரர் சின்னத்தம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News