அரசு பள்ளியில் கழிப்பறை கட்டடம் கட்ட பூமி பூஜை
ஜருகு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு 5,20,000 மதிப்பீட்டில் புதிய கழிப்பறை கட்டடம் கட்ட பூமி பூஜை செய்து தர்மபுரி எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்.;
Update: 2024-03-01 09:39 GMT
ஜருகு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு 5,20,000 மதிப்பீட்டில் புதிய கழிப்பறை கட்டடம் கட்ட பூமி பூஜை செய்து தர்மபுரி எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம், தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மானியதன அள்ளி ஊராட்சி ஜருகு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு 5,20,000 மதிப்பீட்டில் புதிய கழிப்பறை கட்டிடம் கட்ட பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டு விழாவில் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இவ்விழாவில் பாமக நிர்வாகிகள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.