அரசு பள்ளியில் கழிப்பிடம் கட்ட பூமி பூஜை

பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் உள்ள இரு பள்ளிகளில் தலா ஒரு நவீன கழிப்பிடம் ரூ 32 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது.

Update: 2024-03-08 09:34 GMT

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரு பள்ளிகளிலும் தலா ஒரு நவீன கழிப்பிடம் ரூ 32 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்கள் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் பெற்றோர் கழக தலைவர்கள் ராமசாமி தனபால் பொருளாளர் நடராஜன் மேலாண்மை குழு உறுப்பினர்கள் பேரூராட்சி துணைத் தலைவர் வெங்கடேசன் மன்ற உறுப்பினர்கள் ஜெயராமன் பாபு சிவராமன் ராமசாமி ஜோதி ரமேஷ் ராமன் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் ராஜாமணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News